Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்திற்கு எதிராக கொச்சிக்கடை பகுதியில் திரண்ட மக்கள் கூட்டம் : பொலிஸார் குவிப்பு

 


அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொச்சிக்கடையில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


புதிய இணைப்பு

ஜெயவர்த்தனபுர - கோட்டே மாநகர சபைக்கு முன்னால் ஒன்றுதிரண்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தற்பொழுது குறித்த பகுதியில் பெருந்திரளான மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு   

கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் தற்பொழுது பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments