Advertisement

Responsive Advertisement

என் பிள்ளைகள் பட்டினியாக உள்ளனர்! தொலைபேசி கம்பத்தில் ஏறி நின்று கூச்சலிடும் நபர்

 


பொகவந்தலாவ பகுதியில் உள்ள தொலைபேசி கம்பத்தில் நபர் ஒருவர் ஏறி நின்று தற்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றார். 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் விலைவாசி உயர்வால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தமது பிள்ளைகள் பட்டினியாக இருப்பதாகவும், கூறி கூச்சலிட்டு வருவதாக தெரியவருகின்றது.  

மேலும், சம்பவ இடத்தில் கூடியுள்ள மக்கள் குறித்த நபரை கீழே கொண்டு வர முயற்சித்தபோதும், அவர் தாம் கீழே குதித்துவிடுவதாக அங்கிருப்பவர்களை மிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments