Home » » காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்

 


கொழும்பு காலித்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாபதி செயலகத்தின் முன்பாகவும், அலரிமாளிகையின் நுழைவாயில் முன்பாகவும் வீதித்தடை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், அரசாங்கத்திற்கு எதிராகவும் கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் ஆரம்பமாகும் போராட்டம் கொழும்பை வந்தடையவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்த பிரச்சனையும் இருக்காது, எனினும் ஜனாதிபதி செயலகம் அல்லது பிரதமர் இல்லத்துக்குள் நுழைய முயற்சித்தால் பலத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்துவோம் என இதுபற்றி பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |