Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எரிபொருளுக்காக காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு

 


தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று இரவு டீசல் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 47 வயதுடைய பன்னல, கோனவில பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருடைய சடலம் மாரவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

Post a Comment

0 Comments