இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்களின் போராட்டங்களில் 'போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்ற முழக்கம் பலரது கவனத்தினையும் பெற்றுள்ளது.
தமிழின அழிப்புக்கு பொறுப்புக்கூற இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வள அறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இந்நிலையில், 'ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக' என்பதோடு* 'போர்குற்றவாளிகள்' என இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகா ரநீதியிலான அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்' என இவ்விடயம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை 'இனப்படுகொலையாளிகளாக' (DIRTY DOZEN - Genocidaires and War Criminals on Tamils in Sri Lanka) நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது
0 comments: