Advertisement

Responsive Advertisement

கல்முனை கோவில் வீதியிலுள்ள வடிகான்களுக்கு போடப்பட்டுள்ள மூடிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்

 


( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட கோவில் வீதியிலுள்ள வடிகான்களுக்கு மேலாக போடப்பட்டுள்ள மூடிகள் சீரின்மையாலும் சில இடங்களில் மூடி போடப்படாமையினாலும் பொதுமக்கள் பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வடிகானில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்பகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது.

வடிகானில் புற்கள் வளர்ந்து காணப்படுவதுடன் குப்பை கூளங்களும் நிறைந்து காணப்படுகின்றது.
இவ்வீதியில் கோவில் மற்றும் பாடசாலை அமைந்து காணப்படுவதால் தினசரி அதிகளவிலான பக்தர்களும் பாடசாலை மாணவர்களும் இவ் வீதியினை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மின்சார துண்டிப்பு காரணமாக தற்போது வீதி விளக்குகள் எரியாமையினால் இரவில் இவ்வீதியால் பயணிப்போர் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

Post a Comment

0 Comments