Advertisement

Responsive Advertisement

றம்புக்கண சம்பவம் : பச்சை உடை அணிந்திருந்தவர் குறித்து வெளியாகும் தகவல்கள்

 


றம்புக்கண போராட்டத்தில் எரிபொருள் பௌசரில்  தீப்பற்றிய போது தீயை அணைக்க முயற்சி எடுக்காத நபர் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று   செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்காமல் பௌசரில்  இருந்த மரக்கிளையை அகற்றி விட்டுச் சென்றார்.

மேலும் நாம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் பொலிஸ் அதிகாரிகளுடன் இருந்து சம்பவ இடத்திற்கு சென்றமை தெரியவந்துள்ளது.

போராட்டக்காரர்கள் அனைவரையும் பொலிசார் விரட்டியடிக்கும் போது அவர் மட்டும் ஏன் பொலிசாரின் அருகில் வருகிறார் என்பதை கண்டறிய வேண்டிய பொறுப்பு விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இதேவேளை, சம்பவத்தின் போது பௌசருக்கு  தீ வைக்க முயற்சித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரா என நீதவான் இன்று நீதிமன்றில் விசாரணை அதிகாரிகளிடம் வினவினார்.

இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும், காயமடைந்தவர்களில் அப்படி யாரும் இல்லை என்றும் விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.  

Post a Comment

0 Comments