Advertisement

Responsive Advertisement

விடுதலைப்புலிகளின் தலைவர் இருந்த காலத்தில் எமக்கு இந்த அவலம் ஏற்படவில்லை- புத்தாண்டில் மக்கள் ஆதங்கம்!

 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

இன்று சித்திரைப் புதுவருடம் பிறந்திருக்கும் நிலையில்,  இம்முறை சித்திரைப் புதுவருட தினத்தினை யாழ்ப்பாண மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பது குறித்து  எமது ஐபிசி தமிழ் ஊடகம் மக்கள் கருத்தினை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகளின் தலைவர் இருந்த காலத்தில் இவ்வாறன ஒரு நிலைமையினை நாங்கள் எதிர்கொண்டதில்லை. எரிபொருள் வாங்க வரிசையில் நிற்கவில்லை, பால்மா இல்லாமல் ஒருநாள் கூட இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட நாங்கள் இவ்வாறு கஷ்டத்தினை எதிர் கொண்டதில்லை, ஏன் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் கூட இவ்வாறன ஒரு நிலை ஏற்படவில்லை, ஆனால் கோட்டாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்து நாங்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளோம் என்றும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்

Post a Comment

0 Comments