வார இறுதி நாட்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பில் இலங்கை மின்சார சபை தகவல் வெளியிட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் மின் வெட்டு தொடர்பான இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில், நாளை சனிக்கிழமை (23) 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை (24) 03 மணித்தியாலங்களுக்கும் மின் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.
இதன்படி, சனிக்கிழமை (23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (24) காலை 9 மணி முதல் மாலை 5:20 மணி வரை 1 மணி நேரமும் 40 நிமிடங்களும், மாலை 5:20 மணி முதல் இரவு 9:20 மணி வரை 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments