சீனாவில் இருந்து வந்த குழு ஒன்று நீர்கொழும்பில் உள்ள பிரபலமான ஹோட்டல் வலையமைப்புக்கு சொந்தமான ஆடம்பர விடுதியை முற்றாக கைப்பற்றியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், அங்கு பணிபுரிந்த சகல ஊழியர்களும் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கு என்ன காரணம் என்பது தெளிவில்லை என்ற போதிலும் அந்த விடுதியில் தற்போது முழுமையாக சீன பிரஜைகளே தங்கி உள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளோ, ஊழியர்களோ அந்த விடுதியில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments