Home » » கல்வி அமைச்சின் முறையான திட்டம் இன்மையினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இட மாற்றத்தில் குளறுபடி : பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

கல்வி அமைச்சின் முறையான திட்டம் இன்மையினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களின் இட மாற்றத்தில் குளறுபடி : பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு


 (ரவ்பீக் பாயிஸ்)


கல்வி அமைச்சின் முறையான திட்டம் இல்லாமையினால் கிழக்குமாகாண ஆசிரியர்களின் இடம் மாற்றத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்கள் குற்றம் சுமத்துகிறார்

கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு இன்று (21) வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்கள் இடமாற்றமானது அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தடை பட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் அவர்களின் பணிப்புரையின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு உரியமுறையில் இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான எந்த ஒரு தகவலும் பெறப்படவில்லை எனவும் இன்றைய விஜயத்தின்போது கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளருடனான கலந்துரையாடளில் தெரியவந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்

கடந்த காலங்களில் தரவுகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட விரிந்த ஆசிரியர்களின் இடமாட்டம் நடைமுறைப்படுத்தாமல் புதிய தரவுகளை பெரும் நோக்கில் இதுவரை தரவுகள் பெறப்படாமல் காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் இதன்போது தெரிவித்தார்

இவ்வாறு வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை காரணமாகவே காலம் தாழ்த்திச்செல்வதாகவும் கல்வியமைச்சின் சீரான ஒரு திட்டம் இல்லாமையினால் காலம் தாழ்த்துவது விட்டுவிட்டு உரிய ஆசிரியர்களுக்கான இடை மாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்

மேலும் கிழக்கு மாகாணத்தில் கல்வி விடயத்தில் எந்த ஒரு அரசியல் தலையீடுகளுக்கும் அடிபணியாமல் உரியமுறையில் திட்டங்களை வகுத்து நடைமுறை படுத்து மாறும் இதன்போது கேட்டுக்கொண்டார்

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இரண்டாம் கட்ட நடவடிக்கை என்ன என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற தீர்வானது 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அமைவாக மாத்திரமே அமைந்துள்ளது எனவும் சம்பள முரண்பாடுகளுக்கு அப்பால் அதிபர் ஆசிரியர்களின் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கான தீர்வு இதுவரை கிட்டவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்

மேலும் முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளுக்கு தீர்வாக அமைச்சரவைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகளையும் குறித்த அமைச்சரவை குழுவினால் ஆறு மாதத்திற்குள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட போதிலும் மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அதற்கான எந்த ஒரு தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் குறித்த 6 மாத காலத்திற்குள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் அதற்கான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதன்போது தெரிவித்தார்

இன்றய விஜயத்தின் போது கிழக்குமாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றத்தை உரிய முறையில் வெகுவிரைவில் நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திஸாநாயக்க மற்றும் கிழக்குமாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி. என்.பிள்ளைநாயகம் அவர்களிடமும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |