Advertisement

Responsive Advertisement

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில்



( அப்துல் பாஸித்)

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய சிறுநீரக நோயிற்கான சிகிச்சையினை பெற்றுக் கொள்பவர்களுக்கு போக்குவரத்துக் கொடுப்பனவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் காரைதீவு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
 மாவடிப்பள்ளி கிழக்கு  (ரூபா.15000.00), மாளிகைக்காடு மத்தி  (ரூபா.20000.00)  யைச் சேர்ந்த 02 பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில்  சமூகசேவை உத்தியோகத்தர் கு.குணரட்ணம் ,அபிவிருத்தி  உத்தியோகத்தர் சித்தி நளிபா மற்றும்  கிராமசேவை உத்தியோகத்தர்களும்  கலந்து கொண்டனர் .

Post a Comment

0 Comments