Home » » அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது

அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது


 (Asar Deen)

புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று  மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட உள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |