சிறிலங்காவில் மிக மோசமான நிலையொன்று தற்போது காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Vattakala) தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், அராஜக ஆட்சியொன்று முன்னெடுக்கப்படுவதாகவும், கடன் செலுத்த முடியாத நிலையில் நாடு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த நிலைமை தொடர்ந்தால் நாட்டில் மிக மோசமான சமூகப் பிரச்சினை ஒன்று ஏற்படும் எனவும், 20ஆம் திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்துடன் நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியும் என்ற விடயத்தை பரிந்துரைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு மத்தியில், இதனை முன்னெடுக்க முடியும் எனவும், அதனையே தமது கட்சி வலியுறுத்துவதகாவும் சுனில் வட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments