Advertisement

Responsive Advertisement

முல்லைத்தீவில் கரையொதுங்கிய மர்மக் கப்பல்!! பார்க்க படையெடுக்கும் மக்கள் (Photos)

 


முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் மர்மப் பொருள் போன்ற பாரிய கப்பல் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கப்பல் கரை ஒதுங்கியுள்ளதைக் கண்டு கடற்படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்துள்ளனர்.

120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாகக் காணப்படும் இந்தக் கப்பல், செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது.

இந்தக் கப்பல் யாருடையது? எங்கிருந்து வந்துள்ளது? போன்ற விபரங்கள் இதுவரை வெளிவராத நிலையில், பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.


Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments