( அஸ்ஹர் இப்றாஹிம் )
சாய்ந்தமருதுபிரதேசத்தை குறுக்க்கறுத்துச் சென்று முகத்துவாரத்தில் முடிவடையும் தோணா ஆறு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகின்றது.அணடமைகடகாலமாக பெய்துவரும் அடை மழை காரணமாக இத் தோணா ஆறு பெருக்கெடுத்துள்ளதுடன் நீரின் நிறமும் மாறி சகிக்க முடியாத துர்நாற்றமும் வீச ஆரம்பித்துளதல் தோணா ஆற்றின் இரு மருங்கலும் குடியிருக்கும் குடியிருப்பாளர்கள் இரவும் பகலும் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கல்முனைமாநகரசபை எல்லைக்குள் அமையப்பெற்றுள்ள மேற்படி ஆற்றை சுத்திகரிக்கும் பணிகள் கடந்த ஆண்டு கல்முனை மாநகரசபை சுயேட்சைக் குழு சாய்ந்தமருது உறுப்பினர்கள் சிலரால் ஏட்டிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு தோணாவின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டப்பட்டு , பொழுதைக்கழப்பதற்காக கொங்கிறீட் கதிரைகளும் இடப்பட்டன.தற்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் குப்பைகளும் வீட்டுக் கழிவு நீரும் நிறைந்து காணப்படுகின்றது.தோணாமுழுமையாக நீர்க்களைகளினால் மூடப்பட்டு காணப்படுவதுடன் விச ஜந்துக்களின் வாழிடமாகவும் மாறியுள்ளது. இரவு வேளைகளில் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ் விடயத்தில்கவனம் செலுத்தி தோணாவில் வளர்ந்து காணப்படும் நீர்க்களைகளை அகற்றி , சுற்றுப் புறத்தில் வாழும் பொதுமக்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.
0 Comments