பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு மருத்துவ தேவைகளின் நிமிர்த்தம் ஓய்வு தேவைப்படுவதால், பதில் பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து வரும் வாரங்களில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும், இதற்கான ஏற்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்தோடு, முக்கியமான சில அமைச்சுப் பதவிகள் கைமாறப்படவுள்ளதுடன், ஒரு சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன.
இது ஒருபுறமிருக்க, பதில் பிரதமர் பதவி குறித்த விவகாரமும் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
பசில் ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையை இதுவரை துறக்காததால், சமல் ராஜபக்ச அல்லது தினேஷ் குணவர்தன ஆகிய இருவரில் ஒருவர், பதில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறு இருப்பினும், பசிலுக்கு எதிர்ப்புகள் இல்லாது விட்டால், அவரே பிரதமர் பதவியை வகிப்பாரென உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments: