.
( றம்ஸீன் முஹம்மட்)
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 17வது வருடாந்த மாநாடு எதிர்வரும் 15ம் திகதி சனிக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தேசிய மாநாட்டுக்கு நாட்டின் பிரதான மாவட்டங்களில் இருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாட்டின் நிலைமையினை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையுடன் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டுக்கு பல அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.அக்க ட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எம் எஸ் எம் சப்வானின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கும் இம்மாநாட்டில் கட்சிக்காக அரும் பணியாற்றியோருக்கான கௌரவிப்புக்களும், புதிய இணைப்பாளர்களுக்கான நியமன கடிதங்களும் வழங்கப்படவுள்ளன.
ஐக்கிய காங்கிரஸ் கட்சி என்பது 2005ம் ஆண்டு முதல் உலமா கட்சி என்ற பெயரில் இயங்கி வந்ததுடன் கடந்த வருடம் ஐக்கிய காங்கிரஸ் கட்சி என பெயர் மாற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: