Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இந்தோனேஷியாவிற்கு சுனாமி எச்சரிக்கை - இலங்கையை தாக்குமா?


இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கம் தொடர்பான நிலைமையினை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் இன்று காலை 11.20 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை எனவும் நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments