Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு வெடிப்பு சம்பவம்!

 


மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்ததன் காரணமாக பாரிய சேதமேற்பட்டுள்ளது.

நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை உத்தியோகத்தர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் குறித்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலின்டரிலிருந்து வாயு கசிவு வந்துகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்ததுடன் குறித்த வெடிப்பினால் எரிவாயு அடுப்பு இருந்த அறையின் வாயிற்கதவு வெடித்து சிதறியுள்ளதுடன் அதனுள் இருந்த பொருட்களும் முற்றாக எரிந்துள்ளனர்.


இதன்போது வைத்தியசாலையில் எவருக்கும் இருக்கவில்லையெனவும் இதன் காரணமாக மேலும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமைய பொலிஸார்,மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

Post a Comment

0 Comments