Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளி! அமர்வைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய எதிரணி

 


நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றதாக கூறப்படும் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்களை நியமிக்க சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

அமைதியின்மை தொடர்பில் அறிக்கையொன்றையும் பெற்றுக்கொள்ள சபாநாயகர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்ப்பு நடவடிக்கைககளை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில்  பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments