எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
நாட்டை முழுமையாக முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அதேநேரம், நாட்டின் சகல பிரஜைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் வழங்குவதைக் கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
0 comments: