Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டில் நாளை முதல் மின்வெட்டு!...


நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் ஒரு மணிநேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை வெவ்வேறு இடங்களுக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை முழுவதுமாக வழமைக்கு கொண்டு வருவதற்கு சில நாட்கள் தேவைப்படுகின்றது.  இதனாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய கால மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று காலை 11.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments