Home » » 79 வயதிலும் திருந்தாத திருடன்

79 வயதிலும் திருந்தாத திருடன்

 


சுமார் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது முதியவர் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மின்னேரியா தும்பிரியபொல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், சந்தேகநபர் கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, இதற்கு முன்னர் தான் திருடிய 17 மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் 16 வருட சிறைதண்டனை அனுபவித்து வந்துள்ளதோடு, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திருட்டுச் சம்பங்களில் இவர் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |