Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மாணவர்கள் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி- மூடப்பட்டது பாடசாலை!

 ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையே பாடசாலை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாலயத்திற்கு காலையில் பாடசாலைக்கு சென்ற 17 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட்


காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 07.40 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைக் கட்டடம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள பாரிய மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டினை கழுகு மோதியதால் குளவி கலைந்து வந்து மாணவர்களை தாக்கியதாகவும் இதில் தரம் 06 தொடக்கம் 11வரையான மாணவர்களே உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 9ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாகவும் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை குளவி கொட்டு சம்பவம் காரணமாக மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு திருப்பி அனுப்பட்டதோடு இன்றைய தினம் ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர்.ஏ.சத்தியேந்திராவின் பணிப்புரைக்கு அமைய பாடசாலை மூடப்பட்டுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் என்.தியாகராஜன் தெரிவித்தார்.


Gallery 

Post a Comment

0 Comments