Home » » கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்(photoes)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்(photoes)

 


மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்  நாளை(20) முதல்  அதாவது  சனிக்கிழமை முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.


இதற்கமைய  இப் பிரதேசத்தில்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாக காணப்படுவதால் தங்களது வீட்டை சுற்றிலும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி   கேட்டுள்ளார்.

குறித்த விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமானது  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின்  வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி  தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் மழை காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் எனவே நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த தங்கள் வீடுகள் வளைவுகளை சுத்தம் செய்வதோடு தங்கள் வீடுகளில் காணப்படும் நுளம்புகள் பெருவதற்கு ஏதுவான பொருட்கள் அனைத்தையும் சேகரித்து தங்கள் பிரிவுகளில் வருகை தரும் பிரதேச சபை உழவு இயந்திரத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும் விசேட நுளம்பு வேலைத்திட்டமானது கல்முனை மாநகர சபையுடன் இணைந்து பாதுகாப்பு படையினருடன் டெங்கு கண்காணிப்பு குழுக்களும்  விசேட பரிசோதனை ஈடுபடவுள்ளனர்.

எனவே மேற்குறித்த பரிசோதனையின் போது நுளம்பு பெருகுவதற்கு  ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு  எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகவும்  தங்களது வீட்டையும் அதனை சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்து நுளம்புகளின் ஆபத்திலிருந்து  தம்மை பாதுகாத்துக் கொள்வோம் என்பதுடன் வருமுன் காப்போம் வளமாய் வாழ்வோம் என  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி    செய்திக் குறிப்பில்  அறிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |