1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பீரிஸ்(Peiris) தெரிவித்தார்.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சர்வதேச அழுத்தம் முக்கிய காரணமாக மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை தனியாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கையானது பலமான சர்வதேச உறவுகளைக் கொண்டுள்ளதுடன், கூட்டுக் கொள்கைகளின் தொகுப்பை பின்பற்றுவதற்கு நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: