இரசாயன உரம், கிருமிநாசினி மற்றும் களை நாசினிகளை இறக்குமதி செய்வதற்கு இன்று (24) முதல் மீண்டும் அனுமதி வழங்குவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்
து தெரிவித்தபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்பட்டதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments