பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதுவரை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாத தரம் ஆறு தொடக்கம் தரம் ஒன்பது வரையான வகுப்புக்கள் நாளைய தினம் முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புதிய டெல்டா திரிபின் உப பரம்பரை பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலைகளுக்குள்ளும் வெளியிலும் மாணவர்கள் கூடுவதை கட்டுப்படுத்தி,நோய் பரவுவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம் என சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: