இலங்கையில் மற்றுமொரு இடத்தில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிக்கவெரட்டிய, கந்தேகெதரவில் உள்ள வீடொன்றிலேயே எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தமை காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நிக்கவெரட்டிய காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஒரு மாதத்தில் நாட்டில் இடம்பெற்ற ஐந்தாவது சிலிண்டர் வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments