Home » » பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர்

பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர்

 


🔸பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர்.  இவை  அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.

🔸பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம்.

 🔸ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள்  தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால். 

இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது.

 🔸பிராய்லர் கோழி முட்டையில் வெள்ளை கரு அதிகமாகவும் மஞ்சள் கரு குறைவாகவும் இருக்கும். இதனால்,  பிராய்லர் கோழி முட்டை உங்களுக்கு எந்தவிதமான ஊடச்சத்தையும் அளிக்காது.

🔸மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்கள் தள்ளி போவது, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் போவது. பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலுவிழப்பதற்கும், ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் உண்டாக பிராய்லர் கோழி  காரணமாக இருக்கிறது. 

🔸மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவது. பெண்கள் முற்றிலுமாக சிறுவயது முதலே  பிராய்லர் கோழியை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், பிராய்லர் கோழி ஆண், பெண்கள் உடலில் பல்வேறு ஹார்மோன்  ரீதியான பிரச்சனைகள் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணியாக இருக்கிறது.

🔸 உடல் பருமன்

பிராய்லர் கோழியில் அதிக அளவு கெட்ட கொழுப்புகள் அடங்கியுள்ளது.இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு உடல் பருமன், இரத்த அழுத்தம், இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுத்தும். எனவே பிராய்லர் கோழியை அறவே தவிர்த்திடுங்கள்.

🔸புற்று நோய் ஏற்பட வழி வகுக்கும்

பிராய்லர் சிக்கனை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதாக பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்க்கு முக்கிய கரணம் தந்தூரி சிக்கன் மற்றும் கிரில் சிக்கன் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைத்து உண்பது.

எனவே தந்தூரி மற்றும் கிரில் சிக்கனை அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்.

🔸ஆண்களின் மலட்டு தன்மை

தற்பொழுது மிகவும் பொதுவாக உள்ள பிரச்சினை ஆண்களின் மலட்டு தன்மை ஆகும். இதற்க்கு முக்கிய காரணம் அடிக்கடி பிராய்லர் கோழியினை உண்பது ஆகும். இதை வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் ஹர்மோன்கள் ஆண்களின் இனப்பெருக்க சக்தியினை பாதிக்கின்றது.

🔸பறவை காய்ச்சல்

தற்பொழுது பரவலாக ஏற்படும் பறவை காய்ச்சல் முக்கியமாக பிராய்லர் கோழியின் மூலமாக தான் பரவுகின்றது. எனவே இதனை உண்ணும்பொழுது பார்த்து உன்ன வேண்டும் நண்பர்களே.

🔸தேவையற்ற ஆண்டிபயாடிக் உடலில் சேரும்

பிராய்லர் சிக்கனை தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் அதிக அளவில் ஆண்டிபயாடிக் சேரும். இதற்க்கு கரணம் அவை வளரும் பொழுது அவற்றின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படுகின்ற ஆண்டிபயாடிக் ஒரு முக்கிய கரணம் ஆகும்.

🔸விரைவில் பூப்படைய செய்யும்

பிராய்லர் சிக்கனின் வளர்ச்சிக்காக சேர்க்கப்படும் கெமிக்கல் பெண்களை விரைவில் வயதடைய செய்யும். முக்கியமாக இதில் சேர்க்கப்படும் வளர்ச்சி ஹார்மோன் பெண்களை 12 வயதிற்குள் பூப்படைய செய்கின்றது.

🔸பாக்டீரியாக்கள்

பிராய்லர் கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.இதனை சரியாக சமைக்காமல் உண்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். எனவே இதனை அறவே தவிர்த்திடுங்கள்.

 🔸கோழிகளுக்கு அதிக அளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை கொடுப்பதால் அதை சாப் பிடும் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு பல்வேறு வகையான உடல் உபாதைகளை தோற் றுவிக்கிறது. இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம்.

அமெரிக்க கம்பெனிகளும் லெக் பீஸைதான் நம்மிடம் முன்னிறுத்துகிறது. அதிலிருக்கும் அரசியல் மிக முக்கியமானது. கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் கன்ட்டன்ட் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்கர்கள் கோழிக்கால்களை சாப்பி டமாட்டார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கோழிக்கால்களை அவர்கள் வெறும் கழிவு பொருளாகத் தான் கருதுகிறார்கள்.

பெரிய பெரிய நிறுவனங்கள் விளம்பரங்களின் மூலம் நம்மை நம்மை கோழி கால்களுக்கு அடிமைப்படுத் திவிட்டார்கள். கோழிக்கறி என்றாலே  லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும்.  பிராய்லர் கோழிகளால் ஏற்படும் தீமைகளை #supersize என்கிற ஆவணப்படத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பிராய்லர் சிக்கனுக்கு பதிலாக நீங்கள் நாட்டுக்கோழி,  மற்றும் மீனினை உட்கொண்டு வாருங்கள். இப்படி உண்டு வந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |