வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் (17), நாளை மறுதினமும்(18) போராட்டம் இடம்பெறும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் ‘சூம்’ வழியாக ஒன்றுகூடி ஆராய்ந்த சமயம் இத்தகைய தீர்மானம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நடத்தப்பட இருக்கும் போராட்டங்களை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கீகரிக்கவில்லை என்று இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த செய்தியை மறுத்த அவர்,
போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை வலியுறுத்தும் விதத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, காணி அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இத்தகைய போராட்டம் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்
0 Comments