Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவை ஒரே நாளில் உலுக்கிய மரணங்கள்!

 


அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி ஒரே நாளில் 2 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது எனவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 276 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டள்ளது.

அத்துடன் 2 ஆயிரத்து 190 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 29 ஆம் திகதி மாத்திரம் கொரோனா காரணமாக ஆயிரத்து 946 பேர் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் எளிதாக தொற்றக் கூடிய 65 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டின் பொது சுகாதார தேவைகளுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் என அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மூன்றாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments