மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின், செட்டிபாளயத்தில் இன்று செவ்வாய்கிழமை (19) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டர் சைக்கிள் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி போக்குவரத்து காவல்துறையினர் ஸ்தலத்திற்கு விரைந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




0 Comments