Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு

 


அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் நாளைய தினம் (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


அதன்படி, 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் அதிகரிக்க வேண்டுமென சீமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த யோசனையை முன்வைத்திருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த விலையை 100 ரூபாயினால் மாத்திரம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண கோரியுள்ளார்.

இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலையை 97 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 முதல் 12 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments