Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு விகாரையில் கைக்குண்டு - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

 


கொழும்பு - பொரலெஸ்கமுவவில் உள்ள பிரசித்தி பெற்ற பெல்லன்வில ரஜமகா விகாரையிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கைக்குண்டு இன்று பிற்பகல் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

விகாரையில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபரால் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டு பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்த குண்டு செயலிழப்பு பிரிவின் உதவியுடன் பொலிஸார் கைக்குண்டை செயலிழக்கவும் செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைக்குண்டு எப்படி விகாரைக்குள் கொண்டுவரப்பட்டது என்பது பற்றிய விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Post a Comment

0 Comments