Advertisement

Responsive Advertisement

சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு பிரவேசிப்பதை அதிரடித் தடை

 


சேதன பசளையுடன் வரும் சீன கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹார்பர் மாஸ்டர் கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்துள்ளார். 

இருபதாயிரம் மெட்ரிக் டொன் சேதனப் பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை 4 மணிக்கு நாட்டை வந்தடையும் என தேசிய தாவர தொற்று நீக்கி தரப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது.

நாட்டிற்கு வருகை தரும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் தேசிய தொற்று நீக்கி தரப்படுத்தும் சேவை மையம் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. 

அதற்கமைய குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும், வருகை தருவது தொடர்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

இந்த நிலையிலேயே குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments