Advertisement

Responsive Advertisement

21ம் திகதி பாடசாலை செல்ல ஆசிரியர்கள் முன்வைக்கும் நிபந்தனை

 


எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், சம்பள முரண்பாடு தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பிற்கான 30 பில்லியன் ரூபாவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்படும் பட்சத்தில், கல்வி கற்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆராய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.


அவ்வாறு இணக்கம் தெரிவிக்காத பட்சத்தில், 21ம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், கற்பித்தல் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட போவதில்லை என அவர் கூறுகின்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தன.

மூன்று கட்டங்களாக சம்பளத்தை வழங்க முடியும் என பிரதமர் கூறியுள்ளார்.
ஒரு கட்ட சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதலும், எஞ்சிய இரண்டு கட்டங்களையும் 2023ம் ஆண்டு ஆரம்பத்திலும் வழங்க பிரதமருடனான சந்திப்பில் கூறப்பட்டது.

எனினும், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அதனை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments