Advertisement

Responsive Advertisement

தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையில் மட்டக்களப்பு பாடசாலையில் இடம்பெற்ற கொள்ளை!p


 மட்டக்களப்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நேரத்தில் பாடசாலையை உடைத்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி செல்வநகர் சிவா வித்தியாவலயத்திலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனிமைப்படுத்தல்  ஊரடங்குச் சட்ட நேரத்தில் பாடசாலையை உடைத்து கணணிகள் ஒலிபெருக்கி சாதனங்கள் யுபிஎஸ் உட்பட பெருமளவிலான பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு  மோப்ப நாய்களின் உதவியுடன் சந்தேக நபர்கள் இருவர் கணணிகளுடன் கைது செய்யப்பட்டதாக பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்க பாடசாலையின் கணணி அறையை உடைத்து கணனிகளையும் மின்சார உபகரணங்களையும் கொள்ளையிட்ட இருவருமே காத்தான்குடி பொலிசார் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.கஜநாயக்கா தெரிவித்தார்.

கைதான நபர்கள் பொருட்கள் என்பன மட்டக்களப்பு நீதிவான் முன்னலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments