Home » » பாடசாலைகளை திறப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது!

பாடசாலைகளை திறப்பது தொடர்பான ஜனாதிபதியின் தீர்மானம் வெளியானது!

 


பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், அவ்வாறே மேலும் பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும் கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |