Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிசுவை பிரசவித்த தாய் பலி; சிசுவுக்கு தொற்று

 


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர், சிசுவொன்றை பிரசவித்து 10 நாள்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.


அத்துடன், பிறந்த சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது 33) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 15ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக குறித்த கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த பத்து நாள்களுக்கு முன் சிசு பிறந்தது. பிறந்த சிசுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, குறித்த பெண், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த 26ஆம் திகதியன்று மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

குறித்த பெண்ணின் சடலத்தை சுகாதார முறைப்படி தகனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments