Advertisement

Responsive Advertisement

இலங்கை திரும்புவோருக்கு இன்று முதல் விமான நிலையத்தில் புதிய வசதி

 வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு இன்று முதல் 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை கொள்ள முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை பெற்று கொடுக்கும் நோக்கில் அண்மையில் மத்திய நிலையம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் இதனூடாக பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும், இந்த ஆய்வுக்கூட கட்டமைப்பின் ஊடாக மணித்தியாலத்திற்கு 500 பிசிஆர் முடிவுகளையும், நாளொன்றில் 7 ஆயிரம் முடிவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்க்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த பரிசோதனைகளுக்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து 40 டொலர் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments