Advertisement

Responsive Advertisement

நாடு முழுமையாக திறக்கப்படுமா? பகுதியளவில் திறக்கப்படுமா? தீர்மானம் இன்று

 


கொவிட்−19 தடுப்புக்கான செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (17) முற்பகல் கூடுகின்றது.


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து இன்று ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஓரிரு தினங்களாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோர் கருத்து வெளியிட்டு வருகின்ற நிலையில், நாட்டை அடுத்த மாதம் வரை முடக்குமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் நேற்று (16) அறிக்கையொன்றின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தது.

Post a Comment

0 Comments