நியூசிலாந்து நகரில் நேற்றைய தினம் தாக்குதல் மேற்கொண்டவர் மீது நியூஸிலாந்து பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான காத்தான்குடியைச் சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை தொடக்கம் முப்படையினரும் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியில் பிறந்து 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்ற குறித்த இளைஞன் நியூசிலாந்தில் வசித்து வரும் காலத்தில் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டார் என்று நியூசிலாந்து அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞனின் சொந்த இடமான காத்தான்குடியில் அவருடைய இல்லத்தில் அவரின் தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
தகப்பன் மற்றும் சகோதரங்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தயார் மட்டும் காத்தான்குடியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Comments