அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டாலும், பொருட்களுக்கான விலை அதிகரிப்பு அல்லது தட்டுப்பாடு ஏற்படாதென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய கட்டுப்பாட்டு முறைமைக்கு மாத்திரமே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி உரிமம் பெற்ற வணிக வங்ககிகள், தேசிய சேமிப்பு வங்கிகளுடனான நாணயக் கடிதங்களினதும், அத்ததுடன் ஏற்றுக்கொள்ளும் நியதிகளுக்கு எதிரான ஆவணங்களின் கீழ் நூறு சதவீத காசு எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை விதிப்பதற்குத் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதனால், குறித்த பொருட்களுக்கான விலைகளும் பல மடங்காக அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
0 comments: