(வரதன் )மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ம் கட்ட தடுப்பூசிகள் 2லட்சத்து 78 ஆயிரத்து தடுப்பூசிகள் , 2ம் கட்டதடுப்பூசிகள் 2லட்சத்து 18 ஆயிரத்து தடுப்பூசி கள் வழங்கப்பட்டுள்ளது -மட்டு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாளத்தில் 206 பேர் கொவிட் நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதோடு 2 பேர் மரணித்துள்ளனர்.மட்டக்களப்பு வவுனதீவு ஆகிய இடங்களில் ஓருவரும் மரணித்துள்ளதாக பதிவாகியுள்ளனர் மேலும் மட்டக்களப்பு 73 களுவாஞ்குடி 50 செங்கலடி 30 ஆகிய சுகாதாரபிரிவில் கடந்த 24 மணித்தியாளத்தில் கொவிட் நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதேவேளை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் தற்போதுள்ள முடக்க காலத்தில் வெளியே வராமல் சமூக பொறுப்புடன் செயற்பட்டால் கொரோனாவை தடுக்கலாம். மாவட்டத்தில் 32 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 95 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட தடுப்பீசிகள் 74 வீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக 90 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதுவரை 20 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் பணி விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கடந்த மாதத்தில் 7919 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்தவாரத்தில் 1414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 200 பேர் தொற்றுக்குள்ளாவதுடன் 5 பேர் மரணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் முடக்கத்திற்கு முன் 300பேர் அடையாளம் காணப்பட்டனர் தற்போது அது 200 ஆக குறைவடைந்துள்ளது. மாவட்டத்தில் முடக்கத்தின்போது எந்தவித பொது நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மட்டு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நா.மயூரன் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
0 Comments