Home » » சாய்ந்தமருது கிறிக்கட் சம்மேளனத்தின் ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த MPL - 2021

சாய்ந்தமருது கிறிக்கட் சம்மேளனத்தின் ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த MPL - 2021

 (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது கிறிக்கட் சம்மேளனத்தின்  ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த MPL - 2021
மருதூர் பிரிமியர் லீக் - சீசன் - 2
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியின் (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது கிறிக்கட் சம்மேளனத்தின்  ஒரு வருட பூர்த்தியினை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த MPL - 2021
மருதூர் பிரிமியர் லீக் - சீசன் - 2
15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியின் 
ஆரம்ப நாள் போட்டியில்  சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தினர்  9 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றனர்.

சாய்ந்தமருது பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை ( 6)பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி  நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிரான போட்டியின் போதே இவ் வெற்றி கிடைத்தது.

சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.கே.காலித்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பிரன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி  11.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 64  ஓட்டங்களைப் பெற்றனர்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகத்தினர் 6.5 ஓவர்களில் 66 ஓட்டங்களைப் பெற்று ஒரு வி்க்கட்டினை  இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் இச்சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகவும் , அம்பாறை மாவட்ட கிரிக்கட் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சிதத் லியனாராய்ச்சி கெளரவ அதிதியாகவும் , ஓய்வுபெற்ற சிரேஸ்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப் போட்டியில் ஆட்ட நாயகனாக சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழக வீரர் முகமட் சல்பி தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு நடுவர்களாக பாஹிர் மற்றும் அஸ்மி ஆகியோரும் மூன்றாம் நிலை நடுவராக செளக்கியும் , மத்தியஸ்த நடுவராக ரீ.கே.எம்.ஜலீலும் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |