Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர் - அதிபர் வேதன முரண்பாடு-ஒன்று கூடவுள்ள தொழிற்சங்கங்கள்!

 


ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம், அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இதுவரையில் தீர்க்கப்படாத தங்களது வேதன பிரச்சினை தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய நடவடிக்கை குறித்து, இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில், இன்று ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் கூடி தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து தகவல் வெளியிடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 45 ஆவது நாளாகவும் தொடர்கிறது என்பதும் குறிறப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments