அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் நேற்றிரவு மற்றொரு நபருடன் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் பயணிகளுடன் செல்லும் போது முச்சக்கர வண்டி சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
0 Comments