கலந்துரையாடல்கள் மூலம் ஆசிரியர்களின் பிரச்சினையை கையாளவுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவர் புதிதாக நேற்றைய தினம் கல்வி அமைச்சராக பதியேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய கல்வி அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பிற்பகல் வண. எல்லே குணவங்ச தேரரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவிவத்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கலந்துரையாடல் ஊடாக தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு போன்று ஒவ்வொரு அமைச்சின் பணியும் கடினமானதாகவும். சகோதர அமைச்சர்கள் மற்றும் ஜனாதியுடன் இணைந்து இந்த சவாலையும் தேசியப் பணியையும் நிறைவேற்ற நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம்.
மேலும் நமது பிள்ளைகள் தான் இந்நாட்டின் எதிர்காலம். அதை ஆழமாக புரிந்துகொண்டு செயல்பட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments